"இந்திய மீனவர் சங்கம்" என்பது மீனவர்களுக்காக..........
மீனவர் நலனை பாதுகாப்பதற்காக..........
மீனவர்களுக்கு தேவையான கல்வி, பொருளாதாரம், வேலைவாய்ப்பு ஆகியவைகளை முறையாக பெற்றுத்தருவதற்காக.... பொதுநல நோக்கோடு தோற்றுவிக்கப்பட்ட மீனவ சங்கம். மீனவர்களுக்கு அரசு சார்ந்த " கல்வி - வேலைவாய்ப்பு - அரசியல்" ஆகியவற்றில் தனி இடஒதுக்கீட்டை முறையாக பெறுவது... மீன்பிடி தொழிலையும் மீன்பிடி தொழில் சார்ந்த இடமான கடலையும் கடற்கரையையும் மற்றும் ஆறு-குளம்-குட்டை போன்ற நீர்நீலைகளையும் பாதுகாப்பதும் சங்கத்தீன் முக்கிய அம்சமாகும்.
இந்திய மீனவர் சங்கம், ௦5-௦5-2௦௦9 அன்று, திரு, "கிங்ஃபிஷ்". டாக்டர். M.D. தயாளன் அவர்களால் தோற்றுவிக்கப்பட்டது. இச்சங்கம், ௦5-௦5-2௦1௦ - இல் சங்கங்களின் பதிவு துறையில் முறையாக பதிவு செய்யப்பட்டு தொடர்ந்து மீனவர்களின் நலன் காக்கக்கூடிய அனைத்து பணிகளையும் செவ்வனே செய்து வருகிறது. மேலும் இச்சங்கம், மீனவர்களின் நலன் காக்கும் விதமாக, மத்திய - மாநில அரசுகளின் கவனத்தை ஈர்க்கின்ற வகையில், கடித பரிமாற்றங்கள் மற்றும் ஆர்ப்பாட்டங்கள் போராட்டங்கள் வாயிலாக மீனவர்களின் பல்வேறுதரப்பட்ட பிரச்சினைகளை முன்னின்று தீர்த்துள்ளது.